இலங்கை அணிக்கு அபராதம் / பெத்தும் நிஷங்கவுக்கு எச்சரிக்கை

4 years ago
SPORTS
(197 views)
aivarree.com

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2ம் 20/20 போட்டியின் போது, இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்துள் பந்து வீச்சை நிறைவு செய்ய தவறியது.

இதனால் இலங்கை அணிக்கு போட்டி பணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போட்டியின் போது முறையற்ற வார்த்தைப் பிரயோகத்துக்காக துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஷங்கவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துடுப்பாடிய போது தாம் முகம் கொடுத்த பந்து, மட்டையில் படாததால் தகாத வார்த்தையை பிரயோகித்தமைக்காக அவர் எச்சரிக்கப்பட்டதுடன், ஒரு பாதக புள்ளியும் வழங்கப்பட்டதாக ICC அறிவித்துள்ளது.