பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதால் உடல் பலவீனமுற்றவர்கள் பாதுகாப்பு பெறமுடியுமென விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரில் அதிகளவானோர் உடல் பலவீனமுற்றவர்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது இலங்கையில் 61 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு 3வது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
2வது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட தரப்பினருடன் குறித்த எண்ணிக்கையை ஒப்பிடும் போது இது திருப்தியளிக்கக்கூடிய விடயம் அல்ல என வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.
எனவே, கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
