பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர் எஸ். ஹேரத்தின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
