இறுதியில் IMFஐ நாடியது இலங்கை

5 years ago
Sri Lanka
(78 views)
aivarree.com

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாகச் சர்வதேச நாணய நிதியத்தை (IMF) நாடுமாறு பல தரப்பும் வலியுறுத்தி வந்தன.


ஆனால் அந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை அரசாங்கம் வெளியிட்டிருக்கவில்லை.


ஆனால் தற்போது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நிபுணத்துவ ஆலோசனையை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இலங்கை கோரியுள்ளது.


அத்துடன் விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர் என்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.