இந்தியா – இலங்கை முதலாம் 20/20 கிரிக்கட்

5 years ago
tamilnewsline.com

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20/20 கிரிக்கட் போட்டி வியாழக்கிழமை இடம்பெறுகிறது


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் நிறைவடைந்து நான்கு நாட்களுக்குள் இலங்கை மீண்டும் இந்தியாவை சந்திக்கவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் லக்னோவில் வியாழக்கிழமை (24) நடக்கிறது.

அவுஸ்திரேலியாவிடம் இலங்கை அணி 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த போதிலும், இறுதிப் போட்டியில் வெற்றியடைந்தது.

இறுதிப் போட்டியில் உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றமை, இலங்கை அணியின் உறுதிப்பாட்டிற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.