இணைவதா பிரிவதா? | SLFP ஜனாதிபதியுடன் முக்கிய பேச்சு

4 years ago
Sri Lanka
(15 views)
aivarree.com

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் தொடர்ந்தும் இணைந்திருப்பதா? இல்லை? என்பது குறித்து பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானிக்கும் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

எவ்வாறாயினும் அரசாங்கத்திலிருந்து விலகும் எண்ணம் தற்போதைக்கு சுதந்திர கட்சிக்கு இல்லை என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.அமை. துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் சுதந்திர கட்சிக்கு சில கரிசனைகள் இருக்கின்றன.

அவை குறித்து ஜனாதிபதியுடம் கலந்துரையாடப்படும் என அவர் குறிப்பிட்டார்.