மின் வெட்டு சமயத்தில் துப்பாக்கிச் சூடு | கிண்ணியாவில் சம்பவம்

5 years ago
tamilnewsline.com

திருகோணமலை -கிண்ணியா நடுவூற்று பகுதியில் திங்கட்கிழமை(07) மாலை 6.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

சமபவதில் காயமடைந்த 30 வயதான இருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

மணல் வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.

இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் அடையாளம் தெரியாத சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.