மலையகத்தின் நகர்ப்புறங்களை இலக்கு வைத்து ATM மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹட்டன், பொகவந்தலாவை போன்ற சிறிய நகர்களை இலக்கு வைத்து இந்த மோசடிகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
ATM இயந்திரங்களில் பணம் எடுக்கும் நபர்களிடம் இருந்து அவர்களது ATM அட்டைகளின் இரகசிய தகவல்களைக் களவாடி, அவற்றிலிருந்து பணம் பறிக்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்னர் வங்கி ஒன்றினால் காவற்துறையில் முறையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள் ATM இயந்திரங்களில் பணத்தை பெறும் போது, தங்களது இலக்கத்தை மிக இரகசியமாக பேணுமாறு கோரப்பட்டுள்ளது.
