ரணில் விக்ரமசிங்கவின் வாக்கு பலிக்கிறதா?

4 years ago
Sri Lanka
(133 views)
aivarree.com

ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 300 ரூபாய் வரைக்கும் வீழ்ச்சியடையும் என முன்னாள் பிரதமர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்திருந்தார்.

அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்திருந்த ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கியின் செயற்பாடுகள் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி மிகமிக குறைவடைந்து வருகின்றமையை சுட்டிக்காட்டியிருந்தார்.

திங்கட்கிழமை இலங்கை மத்திய வங்கி இலங்கை நாணயத்தின் பெறுமதியை 15% மதிப்பிறக்கம் செய்து, ஒரு டொலர் 230 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், கருப்பு சந்தை அல்லது மாற்று சந்தையில் டொலர் ஒன்றின் பெறுமதியானது 255 ரூபா வரைக்கும் அதிகரித்திருப்பதாக, வரும் நாட்களில் இது 270/- வரை செல்லும் எனவும் சொல்லப்படுகிறது.

எதிர்வரும் வாரங்களில் டொலர் ஒன்றின் பெறுமதி 300/- வரைக்கும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.