800 பவுசர்கள் நிறுத்தம் | எண்ணெய் விநியோகம் கேள்விக்குறி

4 years ago
Sri Lanka
(75 views)
aivarree.com

நாடளாவிய ரீதியாக எண்ணெய் விநியோகத்தில் ஈடுபடுகின்ற 800க்கும் அதிகமான தனியார் பவுசர்கள் சேவையில் இருந்து விலகவுள்ளன.

எண்ணெய் பரிமாற்று சேவையில் ஈடுபடுகின்ற பவுசர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை.

அதனால் அந்த பணிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தனியார் பவுசர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 70-80 எண்ணெய் பவுசர்களே இருக்கின்றன.

இதனால்; எண்ணெய் விநியோகம் பெரும் சிக்கலுக்கு உள்ளாகி இருப்பதாக அறிய முடிகிறது.