4800 பாவித்த அரச வாகனங்கள் நிலை

4 years ago
Sri Lanka
(135 views)
aivarree.com

அரசாங்க நிறுவனங்களிடம் சுமார் 82,194 வாகனங்கள் இருக்கின்றன.

அவற்றில் 4800க்கும் அதிகமானவை பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளன.

அவற்றை பழுது பார்க்க அல்லது அழித்துவிடுவதற்கான உத்தரவினை அரசாங்கம் பிறப்பித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் 3229 வாகனங்கள் பழுது பார்ப்பதற்காகவும், 620 வாகனங்கள் அழிக்கப்படவும் உள்ளன.

2020ம் ஆண்டு நிதி அமைச்சு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.