அடுத்த வாரமும் நாடு இருளில்தான்

4 years ago
Sri Lanka
(28 views)
aivarree.com

மின்சாரத் தடை இந்த மாதம் 5ம் திகதிக்குப் பின்னர் நீக்கப்படும் என்று புதிதாக பதவியேற்ற அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்திருந்தார்.


ஆனால் தற்போது வரையில் மின்சார விநியோகத்தடை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


தனியார்த் துறையிடம் இருந்து மேலதிகமாக 200 மெகாவோட் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவையும், பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவும் அனுமதி வழங்கி இருந்தன.


ஆனாலும் அது போதுமானது அல்ல என்றும், அடுத்த வாரமும் மின்சாரத்துக்கான கேள்வி மேலும் 200 மெகாவோல்ட் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


இந்தநிலையில் அடுத்த வாரமும் மின்சார தடையைத் தொடர்ந்தும் அமுலாக்க வேண்டிய நிலை இருப்பதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.