அரசு+IMF நாளை பேச்சுவார்த்தை

5 years ago
tamilnewsline.com

அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை (அரசு+IMF) திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஒன்று திங்கட்கிழமை (14) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது.


பின்னர் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது நாட்டில் நிலவும் வெளிநாட்டு நாணய பற்றாக்குறை குறித்தும், கடன் மீள் கட்டமைப்பு குறித்தும் முக்கிய அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 


இதன் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை (அரசு+IMF) ஏப்ரல் மாதம் 11ம் திகதி வொசிங்டனில் நடைபெறும் நிலையில், அதில் பசில் ராஜபக்ஷவும், எஸ்.ஆர்.அட்டிகலவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
த மோர்னிங்