2016ஆம் ஆண்டு இரண்டாவது பிணைமுறி மோசடி வழக்கில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்ப்ட 10 பேர் விடுவிக்கப்பட்டனர்.
ரவி கருணாநாயக்க, அர்ஜுன் மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 10 பேரை இந்த ஒரு குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்க கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (4) உத்தரவிட்டது.
அரசாங்கத்துக்கு 36 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்து அவர்கள் மீது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அந்த குற்றச்சாட்டை இந்த சட்டத்தின் கீழ் பேண முடியாது என நிரந்தர நீதாயத்தின் பெரும்பான்மையான நீதிபதிகள் தீர்மானித்தனர்.
