பாகிஸ்தான்/ பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு / பலர் பலி

4 years ago
World
(168 views)
aivarree.com

பாகிஸ்தானின் வடக்கு நகரான பெஷாவாரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள கொச்சா – ரிசால்டார் பிரதேசத்தில் பதிவான இந்த சம்பவத்தில் குறைந்தது 30 பேர் பலியாகினர்.

மேலும் 50 பேர் வரையில் காயமடைந்தனர் – அவர்களில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

பள்ளிவாசலில் பக்தர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குண்டு வெடிப்புக்கு முன்னர் தீவிரவாதிகள் சிலர் பள்ளிவாசலுக்குள் ஆயுதங்களுடன் பிரவேசிக்க முயற்சித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.