இந்தியா கூறுவதை தவறாகப் பார்க்கவில்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

5 years ago
Sri Lanka
(107 views)
aivarree.com

13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்ட முக்கிய விடயங்கள்.

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, தமிழ் மக்களது நலன்களுக்காக குரல் கொடுக்காதுள்ளவர்கள் மீதே தவறுள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை நிராகரித்து, சமஷ்டிக்கு குறைவான எந்தவொரு தீர்வையும் கருத்தில் எடுக்க முடியாது என்பதை வலியுறுத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

எனினும் இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13 திருத்தத்தை தீர்வாக நாங்கள் ஒருபோதும் எற்றுக்கொள்ள மாட்டோம்.