வானிலை முன்னறிவிப்பு | கடும் இடி மின்னல் | அவதானம்

4 years ago
Sri Lanka
(75 views)
aivarree.com

மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் அளவில் கனமழை பெய்யும் என வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா ஆகிய மாகாணங்களில் கடும் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.