சமையல் எரிவாயு விலையை ஏற்ற முயற்சி

5 years ago
tamilnewsline.com

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக லிற்றோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் எரிவாயுக்கான விலை அதிகரித்துள்ளமை மற்றும் இலங்கையில் டொலர் பெறுமதியும் அதிகரித்தமை போன்ற காரணங்களால், எரிவாயு உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் 835 ரூபாய் என்ற அடிப்படையில் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலையை கூட்டுவதற்கு ஆலோசித்து வருவதாக லிற்றோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை லாஃப் எரிவாயு நிறுவனம் தமது விநியோகத்தை மட்டுப்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.