வவுனியா/ பேருந்து மோதி தந்தை மகன் பலி (படங்கள்)

4 years ago
Sri Lanka
(146 views)
aivarree.com

வவுனியா – குருக்கள்புதுக்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை பேருந்து ஒன்று தந்தையும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதியது.

விபத்தில் 46 வயதான தந்தையும் 14 வயதான மகனும் மரணித்தனர்.

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதிக்குள் பிரவேசித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

சம்பவத்தை அடுத்து, குறித்த பகுதியில் ஒன்று திரண்ட மக்கள் பேருந்தை தாக்க முற்பட்ட நிலையில் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.