ஷேன் வோர்ன் மரணத்தில் மர்மம்? – அறையில் காணப்பட்ட இரத்தத்துளிகள்

4 years ago
World
(128 views)
aivarree.com

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் தாய்லாந்தில் உள்ள வில்லா ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மரணித்தார்.


அவரது அறையைச் சோதனையிட்ட தடயவியலாளர்கள் அதிகப்படியாக இரத்தத்துளிகள் காணப்பட்டமையை அவதானித்துள்ளனர்.


இதனை அடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.


எனினும் மாரடைப்புடன் ஆஸ்த்மாவும் ஏற்பட்டிருந்ததால் ஷேன் வோர்ன் இருமும் போது இரத்தம் கசிந்திருக்கலாம் என்றும், அவருக்கு இறுதி தருணத்தில் அவரது நண்பரால் அவசர சிகிச்சை வழங்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மேலும் பதிவாகியுள்ள சீ.சீ.டி.வி காட்சிகளில், அறையில் இந்த சந்கேகத்துக்கு இடமான சம்பவங்களும் பதிவாகி இருக்கவில்லை என்று தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.