யுத்தம் ஏற்படுவதை விரும்பவில்லை / புட்டின்

4 years ago
World
(42 views)
aivarree.com

ஐரோப்பாவில் போர் ஒன்று ஏற்படுவதை ரஷ்யா விரும்பவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ஆனால் ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்த கரிசனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு அருகிலுள்ள எல்லையில் இருந்து சில துருப்புக்கள் பின்வாங்குவதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ள சமயத்தில் ரஷ்ய ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இது ரஷ்ய – உக்ரைன் பதட்டத்தை தணிப்பதற்கான மொஸ்கோவின் முதல் அறிகுறி என கருதப்படுகிறது.

எனினும் ரஷ்ய படையினர் மீளப் பெறப்படுவதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்று மேற்கத்திய தலைவர்கள் கூறுகின்றனர்.