பிக்குவுக்காக பரீட்சைக்கு தோற்றிய பிக்கு கைது / புத்தளம் தமிழ் பாடசாலை ஒன்றில் சம்பவம்

4 years ago
Sri Lanka
(48 views)
aivarree.com

பிக்கு ஒருவர் சார்பாக போலி தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு பிக்கு புத்தளம் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.

கொக்மாடுவ – வெலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் பிக்கு ஒருவருக்காக குறித்த நபர் பரீட்சை எழுதியுள்ளார்.

புத்தளம் புனித மரியாள் தமிழ்க் கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மஹஹில்ல – இசுருபுர, பேலுரத்த பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் பிக்கு ஒருவரே இவ்வாறு கைதானார்.

#Lankadeepa