ஊசி போட்டு கொள்ள மாட்டேன் / அடம்பிடிக்கும் ஜொகோவிச்

5 years ago
tamilnewsline.com

எதிர்கால டென்னிஸ் தொடர்களை இழக்க நேரிட்டாலும், கொவிட் தடுப்பூசியை பெறப்போவதில்லை என்று நோவக் ஜோகோவிச் கூறியுள்ளார்.

ஜொகோவிச் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்.

தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமை மற்றும் விசாவுக்காக போலி தகவல் வழங்கியமை போன்ற காரணிகளால் கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

எவ்வாறாயினும் தாம் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இதனால் ஃபிரன்ச் பகிரங்க தொடர் போன்ற போட்டிகளைத் தவறவிடவும் தயாராக இருப்பதாக ஜொகோவிச் கூறுகிறார்.