யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்லும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.நந்தகுமாரன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னர், வெளிநாடு செல்பவர்கள் மேற்கொள்ளும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக 5000 ரூபா கட்டணம் அறவிடப்பட்டது.
வெள்ளிக்கிழமை முதல் இந்த கட்டணம் 6500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
