கொவிட் / ஒரு வாரத்தில் 151 மரணங்கள் / 6,855 தொற்றாளர்கள்

4 years ago
Sri Lanka
(31 views)
aivarree.com

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45-49 சதவீதத்தால் அதிகரித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் 151 மரணங்களும், 6,855 தொற்றாளர் எண்ணிக்கையும் பதிவாகியுள்ளன.


இதன்படி மொத்த மரணங்களின் எண்ணிக்கை 15,572 ஆகவும், மொத்த நோயாளர் எண்ணிக்கை 615,902 ஆகவும் உயர்ந்துள்ளதுடன், 20,138 பேர் சிகிச்சைப் பெறுகின்றனர்.


அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.


இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும் என்று சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.