மஞ்சள் விலை குறையாது!?

4 years ago
Sri Lanka
(49 views)
aivarree.com

2019ம் ஆண்டு முதல் இலங்கைக்கு மஞ்சள் இறக்குமதி தடை செய்யப்பட்டது.


உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தடை அமுல்படுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறி வருகிறது.


தற்போது மஞ்சள் கிலோ 4000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் அதேநேரம், இந்தியாவில் இருந்து களவாக கொண்டுவந்து கறுப்பு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமையும் அதிகரித்துள்ளது.


அதேநேரம் உள்ளுர் உற்பத்தியாளர்கள் மஞ்சள் உற்பத்திக்கு பெருந்தொகையை செலவிட நேரிட்டுள்ளதால், குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாது என்று அறிவித்துள்ளனர்.


இதனால் மஞ்சள் விலை மாற்றமின்றி அதிகரித்த நிலையிலேயே இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


த சண்டே டைம்ஸ்