முன்னறிவிப்பு இல்லாத மின்வெட்டு நாளை

4 years ago
Sri Lanka
(139 views)
aivarree.com

மின்வெட்டு நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி செவ்வாய்க்கிழமை (01) காலை 8.30 முதல் மாலை 5.30 வரையில் நாடு முழுவதும் 3 மணி நேரம் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலாக்கப்படும்.

எனினும் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் 30 நிமிடங்களுக்கு முன்னறிவிப்பு இன்றி மின்தடை அமுலாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் அதியுச்ச மின்சார பாவனை நிலவுகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.