அமைதி பேச்சுவார்த்தை / உக்ரைன் பிரதிநிதிகள் பெலாரசை சென்றடைந்தனர்.

4 years ago
World
(35 views)
aivarree.com

ரஷ்ய பிரதிநிதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான உக்ரைன் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பெலாரஸ் எல்லையை சென்றடைந்தனர்.

உக்ரைனில் இருந்து ரஷ்ய படையினரை முழுமையாக வெளியேற்றுவதும், ஆயுத கலைவும் இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய மையப்பொருளாக இருக்கவுள்ளன.

இந்த பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்பு பாதுகாப்பு மற்றும் இடம் குறித்த பிரச்சினையால் தாமதித்து வந்திருந்தது.

அத்துடன் இந்த பேச்சுவார்த்தையால் நடக்கப்போவது ஒன்றும் இல்லை என்று உக்ரைன் ஜனாதிபதி அறிவித்திருந்தாலும், சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பேச்சுவார்த்தைக்கு இணங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.