மியன்மாரிடம் அதிக விலைக்கு அரிசி வாங்கும் இலங்கை/ கட்டுப்பாடுகளும் இல்லையாம்.

4 years ago
Sri Lanka
(23 views)
aivarree.com

இராணுவ ஆட்சி இடம்பெறும் மியன்மாரிடம் இருந்து ஏனைய நாடுகளை விட 1 மெற்றிக் டன்னுக்கு 110 டொலர்கள் அதிகவிலையில் இலங்கை அரிசி கொள்வனவு செய்துள்ளது.


அங்கிருந்து 100,000 மெற்றிக் டன் அரிசி கொள்வனவு செய்ய அரசாங்கம் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.


ஏனைய நாடுகளுக்கு மியன்மார் மெற்றிக் டன் 340-350 டொலர்களுக்கு அரிசி விற்பனை செய்கின்ற நிலையில், இலங்கை அதனை மெற்றிக் டன் ஒன்று 440-450 டொலர்கள் என்ற அடிப்படையில் கொள்வனவு செய்துள்ளது.


சீனா, ஐரோப்பிய நாடுகள் போன்று எவ்வித தரச்சான்றிதழ்கள் போன்ற கட்டுப்பாடுகளும் இன்றி அங்கிருந்து இலங்கை அரசி கொள்வனவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

#த க்ளோபல் நியு லைட்