22 இந்திய மீனவர்கள் கைது

4 years ago
Sri Lanka
(36 views)
aivarree.com

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களது 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கைதான இந்திய மீனவர்கள் காங்கேசந்துறை துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


இந்த மாதம் 50க்கும் அதிகமான இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர்.


அண்மையில் அவர்களில் 21 பேர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.