மின்விநியோகம்/மின்சார சபையின் தீர்மானம்

4 years ago
Sri Lanka
(31 views)
aivarree.com

மின்சாரத்திற்கு குறைந்த கேள்வி நிலவுமாயின் இன்றைய தினத்திலும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் செயலிழந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அதிக கேள்வி நிலவும் சந்தர்ப்பங்களில் அதனை பூர்த்தி செய்ய 1,600 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுவதாகவும் வார இறுதி, விடுமுறை நாட்களில் போதுமான மின்சாரத்தை வழங்க முடியும் எனவும் மின்சக்தி அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாட்களிலும் மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Reported by
Editorial Reporter