வியாழக்கிழமை முதல் சிற்றுண்டி சாலைகளுக்கு பூட்டு

4 years ago
Sri Lanka
(54 views)
aivarree.com

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சிற்றுண்டி சாலைகளுக்கான உணவு விநியோகம் வியாழக்கிழமை(17) முதல் நிறுத்தப்படவுள்ளது.

எரிவாயு விநியோகத்தை முற்றாக நிறுத்துவதாக எரிவாயு நிறுவனங்கள் அறிவித்ததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கம் விரைவான தீர்வை வழங்காவிடின், உணவகங்கள் மூடப்படுவதால் சுமார் 500,000 பேர் தமது வேலையை இழக்க நேரிடும்.

நாளொன்றுக்கு 2 முதல் 5 எரிவாயு கொள்கலன்கள் தேவை எனினும், கையிருப்பில் எரிவாயு கொள்கலன்கள் இல்லாதமையால் வியாழக்கிழமை (17) முதல் உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.