அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 275 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 264.66 ரூபாவாகவும் விற்பனை விலை 274.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகள் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 275 ரூபாவாக காணப்பட்டது.
இதேவேளை, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 11ஆம் திகதி வரையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 20.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன், உள் நாட்டில் பதிவு செய்யப்படாத நாணய மாற்றுனர்கள் (கறுப்பு சந்தை) டொலர் விலையை 300/- வரை உயர்த்தியுள்ளனர்.
