இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்தமைக்காக கைப்பற்றப்பட்ட தமிழக மீனவ படகுகளில் பயன்படுத்த முடியாதனவற்றை அகற்றுவதற்காக, தமிழகத்தில் இருந்து குழு ஒன்று இலங்கை வரவுள்ளது.
இந்த குழு இலங்கை வருவதற்கான அனுமதியை தருமாறு அண்மையில் மீண்டும் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.
இந்த படகு விடயத்தில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்கனவே புரிந்துணர்வு இருக்கிறது.
அதன்அடிப்படையிலேயே இந்தநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீரகேசரி பத்திரிகையால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய உயர்ஸ்தானிகரகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
