கச்சதீவு திருவிழாவில் இந்திய யாத்திரிகர்களுக்கும் அனுமதி / டக்ளஸ் தமிழக அரசுக்கு உறுதி

5 years ago
Sri Lanka
(49 views)
aivarree.com

கச்சதீவு திருவிழாவில் இந்திய யாத்திரிகர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உறுதியளித்துள்ளார்.

அத்துடன் இதில் கலந்துகொள்ளும் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில் கலந்துரையாடலை நடத்தவும் ஏற்பாடு செய்யவுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்களை அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிரதிநிதி ஒருவரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொலைபேசியில் இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.