டீஜே லங்கா தலைவராகிறார் அஜித் குணவர்தன

4 years ago
(63 views)
aivarree.com

இலங்கையின் மிகப் பெரிய ஆடை உற்பத்தியாளரான டீஜே லங்கா பிஎல்சி, பிரபல வர்த்தகத் தலைவர் அஜித் குணவர்தனவை தலைவராக நியமிக்கவுள்ளது.

தற்போதைய தலைவர் பில் லாம் ஃபெப்ரவரி 17 அன்று ராஜினாமா செய்வதுடன், அவரது 13 ஆண்டுகால சேவை நிறைவடைகிறது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் (துமுர்) முன்னாள் துணைத் தலைவரும், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி (Nவுடீ) மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் முன்னாள் தலைவருமான குணவர்தன பெப்ரவரி 17ஆம் திகதி முதல் பொறுப்பேற்றுக் கொள்வார்.

டீஜே லங்கா, 2023 ஆம் ஆண்டளவில் 300 மில்லியன் டொலர் நிறுவனமாகவும், நீண்ட காலத்திற்கு 500 மில்லியன் டொலர் வணிகமாகவும் மாறுவதற்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளது.

நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு குணவர்தனவின் நியமனம் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக டீஜே லங்கா அறிவித்துள்ளது.

Reported by
Editorial Reporter