ஒரு வாரத்துக்கு மின் தடை இல்லை

5 years ago
tamilnewsline.com

ஒரு வார காலத்துக்கு மின்சார விநியோகம் தடைபடாது என தெரியவந்துள்ளது.

தொடர்ந்து ஒரு வார காலத்துக்கு தேவையான எரிபொருளை மின்சார சபைக்கு வழங்க அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.

இதனால் போதுமான மின்னுற்பத்தி இடம்பெறும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் மின் உற்பத்தி முனையங்களில் பழுதுகள் ஏற்பட்டால், அதன் பின்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reported by
Editorial Reporter