ஜனாதிபதி + IMF முக்கிய சந்திப்பு நிறைவு

4 years ago
Sri Lanka
(109 views)
aivarree.com

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நிறைவடைந்தது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, நாணய நிதியத்தின் ஆசிய பசுஃபிக் பிராந்திய பணிப்பாளர் Changyong Rhee, பிரதி பணிப்பாளர் Dr. Anne-Marie Gulde-Wolf மற்றும் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Tubagus Feridhanusetyawan ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் மேற்கொண்ட ஆய்வின் விபரங்கள் இதன்போது பகிரப்பட்டன.

முக்கிய சந்திப்பு அடிப்படையிலேயே ஜனாதிபதி கோட்டாபய, புதன்கிழமை (16) தமது “தேசத்துக்கான உரையை” நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.