சோதனைகள் குறைவு | ஆனால் கொவிட் அதிகரிப்பு | WHO எச்சரிக்கை

5 years ago
tamilnewsline.com

உலகில் கொவிட் இனி இல்லை என்று நினைக்காமல் தொடர்ந்தும் கட்டுப்பாடுகளை பேண வேண்டும் என, உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

ஆசியா மற்றும் பசுஃபிக் நாடுகளில் கொவிட் நோய் கடந்த ஜனவரி மாதத்துக்கு பின்னர் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

சீனாவின் சில இடங்கள் முடக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகள் பலதும் மிகக்குறைவான அளவிலேயே கொவிட் பரிசோதனைகளை நடத்துகின்ற நிலையில், கொவிட் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

எனவே கொவிட் நோயுடன் பலர் அடையாளம் காணப்படாமல் இருக்க கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.