இலங்கையில் நிதி அமைச்சராக உள்ள பசில் ராஜபக்ஷ அடுத்தவாரம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.
இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்காக அவர் அங்கு செல்கிறார்.
ஏற்கனவே இந்தியா வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 500 மில்லியன் டொலர் கடனுதவி ரிசர்வ் வங்கியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த உதவிக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் அடுத்த மாதம் 17ஆம் திகதி பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

