விவசாய காணி ஒன்றில் விலங்குகள் வராமல் தடுப்பதற்காகச் சட்டவிரோதமாகப் போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கில் இருவர் (28 மற்றும் 38 வயது) பலியாகினர்.
பெல்மதுளை – பட்டலந்தைப் பகுதியில் இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த இருவரும், சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வுப் பணியில் ஈடுபடுவதற்காகச் சென்றபோது, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பட்டலந்தை பகுதியைச் சேர்ந்த இருவரே பலியானதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
