tamilnewsline

சட்டவிரோத மின்வேலியில் சிக்கிப் பலியான இருவர்

Google

விவசாய காணி ஒன்றில் விலங்குகள் வராமல் தடுப்பதற்காகச் சட்டவிரோதமாகப் போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கில் இருவர் (28 மற்றும் 38 வயது) பலியாகினர்.


பெல்மதுளை – பட்டலந்தைப் பகுதியில் இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


குறித்த இருவரும், சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வுப் பணியில் ஈடுபடுவதற்காகச் சென்றபோது, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இதன்போது, பட்டலந்தை பகுதியைச் சேர்ந்த இருவரே பலியானதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version