கொழும்பு – ஹொரணை வீதியில் போக்குவரத்து மட்டு

5 years ago
tamilnewsline.com

கொழும்பு – ஹொரணை வீதியில் பிலியந்தலை பொகுந்தர பாலத்தின் மீது ஞாயிறு (13) முதல் மறு அறிவித்தல் வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.

காவல்துறை ஊடக் அறிக்கையின் படி, காலை 6.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை கொழும்பு நோக்கிய இரண்டு ஒழுங்கைகளிலும், ஹொரணை நோக்கி ஒரு ஒழுங்கையிலும், பிற்பகல் 3.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை கொழும்பு நோக்கி ஒரு ஒழுங்கையிலும், ஹொரணை நோக்கி இரண்டு ஒழுங்கைகளிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.

மேலும், காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் பயணிகள் பேருந்துகள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் பாலத்தில் அனுமதிக்கப்படாது.

வீதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போது மாற்று வழிகளை பயன்படுத்துமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.