பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கத்தினர் கடந்த ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சனிக்கிழமை இந்த போராட்டத்தில் இருந்து அரச தாதியர் சங்கம் விலகி இருந்தது.
நீதிமன்றம் இந்த போராட்டத்துக்கு தடை விதித்திருந்த நிலையில் இந்த தீர்மானத்தை தாதியர்கள் சங்கம் மேற்கொண்டிருந்தது.
எவ்வாறாயினும் இந்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதா இல்லையா என்பது சம்பந்தமாக சுகாதாரப் பணியாளர்கள் தொழிற்சங்கங்கள் ஞாயிற்றுக்கிழமை (13) கூடி தீர்மானிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
