‘காதலுக்காக ஒரு செடி’ எனும் தொனிப்பொருளில் மரம் நடும் திட்டத்தை நடைமுறைப்படுத்த சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி கொண்டாடப்படும் காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் கீழ் எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி காலை 09.00 மணிக்கு மரநடுகை நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது.
கடந்த ஆண்டிலும் காதலர் தினத்தன்று 50,000 மரக்கன்றுகளை நாட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.
