கர்ப்பிணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அபாயம்

5 years ago
tamilnewsline.com

கொவிட் தொற்றினால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களது எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

இதேவேளை டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களது எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

எனவே சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகளை கொண்ட கர்ப்பிணிகள் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறு விசேட மகப்பேற்று வைத்தியர் வைத்தியர் சனத் லெனரோல் அறிவுறுத்தியுள்ளார்.

சிகிச்சையை தவிர்ப்பது நோய் நிலையை தீவிரப்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Reported by
Editorial Reporter