இலங்கைக்கு உதவத் தயார் / IMF

5 years ago
Sri Lanka
(127 views)
aivarree.com

இலங்கை கோரினால் உதவி செய்யத் தயாராக இருப்பதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி மசாஹிரோ நொஷாகி அறிவித்துள்ளார்.

ஆனால் அவ்வாறான கோரிக்கை எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

நிதியமைச்சின் பேரண்ட நிதி பிரிவின் இயலுமை விருத்திக்கான பயிற்சிகளை IMF இம்மாதம் 9ம் திகதி வரை இணைய வழியில் வழங்கும்.

இலங்கையின் பொருளாதார நிதி நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்.

இம்மாத இறுதியில் இலங்கையின் நிதி, பொருளாதார நிலவரங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யும் கூட்டம் ஒன்று இடம்பெறும், என்றார்.

Reported by
Editorial Reporter