எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது, தடையின்றி மின்னுற்பத்திக்கான எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்தார்.
எரிபொருள் விலை தொடர்பாக தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சிரேஷ்ட்ட அமைச்சர் ஒருவர் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.
அத்துடன் இலங்கை மின்சாரசபை, எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்தவேண்டியுள்ள 80 பில்லியன் ரூபாய் கடனை அரசு செலுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படாவிட்டால், எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் நட்டத்தை ஈடு செய்ய மாற்று பொறிமுறை ஒன்றை நடைமுறைப் படுத்துமாறு அமைச்சர் உதய கம்மன்பில கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு எமது வட்சப் குழுவில் இணையுங்கள்
WhatsApp Group >>
