தாறுமாறாக விலை ஏறும் எண்ணெய்/ சர்வதேச சந்தையில் பீப்பாய் $100 ஐ நெருங்கியது

4 years ago
World
(62 views)
aivarree.com

எண்ணெய் ஒரு பீப்பாய் விலை சர்வதேச சந்தையில் செய்வாய்க்கிழமை 99 டொலர்களாக அதிகரித்து பின்னர் சந்தை நிறைவடையும்போது 97 டொலராக பதிவானது.

குறிப்பாக ப்ரெண்ட் எண்ணெய் கடந்த 7 ஆண்டுகளில் அதியுச்ச விலையை அடைந்தது.

ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில் சர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை பாரியளவுக்கு அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே கடந்த சில நாட்களிலேயே ரஷ்ய – உக்ரைன் பிரச்சினை காரணமாக எண்ணெய்யின் விலை 15 டொலர் வரையில் அதிகரித்திருக்கிறது

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 10 சதவீதத்தை பூர்த்தி செய்கின்ற ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் பட்சத்தில், உலகில் மிகப்பெரிய சக்திவள நெருக்கடி ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.