உக்ரைன் விவகாரம்/ 13 முக்கிய Updates

4 years ago
World
(82 views)
aivarree.com

காலமாற்றத்துக்கு ஏற்ப இரத்தின சுருக்கமாக செய்திகளை வழங்கும் நவீன பொறிமுறையை கையாளும் அய்வரி செய்திகளின், ரஷ்ய – உக்ரைன் விவகாரம் குறித்த புதுப்பிக்கப்பட்ட 13 தகவல்கள் வருமாறு.

1) யுக்ரென் மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை பெலாரஸில் ஆரம்பமாகியுள்ளது – உடனடி போர் நிறுத்தத்தை உக்ரைன் கோருகிறது.

2) உடனடியாக தங்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்குமாறு உக்ரைன் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

3) ரஷ்ய படையினரின் தாக்குதல்கள் குறைவடைந்திருப்பதாக உக்ரைன் படையினர் கூறுகின்றனர்.

4) மொஸ்கோ தமது அணுவாயுத படை பலத்தை மேலோங்கச் செய்து, உச்ச தயார் நிலையில் வைத்துள்ளதாக அறிய முடிகிறது.

5) உக்ரைன் – ரஷ்ய போரினால் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 352 ஆக அதிகரித்துள்ளது – 14 சிறார்களும் உள்ளடங்குகின்றனர்.

6) உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி ரஷ்யாவில் போராட்டம் நடத்திய 2000க்கும் அதிகமான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7) கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையை வெளிப்படுத்தும் செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் என்று ரஷ்யா, கூகுள் நிறுவனத்தை கோரியுள்ளது.

8) உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நேட்டோ நாடுகள் அதிகப்படுத்துகின்றன.

9) ஐரோப்பிய ஒன்றியம் வான்பரப்பை தடை செய்ததன் காரணமாக, ரஷ்யா மிக நீண்ட வான்பாதையை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

10) உக்ரைனில் இருந்து 420,000க்கும் அதிகமானவர்கள் வெளியேறி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

11) இராணுவ பயிற்சிகளைப் பெற்ற, உக்ரைன் சிறைகளில் இருக்கின்றவர்களில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் கலந்து கொள்ள விரும்பும் கைதிகளை விடுவிக்க உக்ரைன் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

12) அமெரிக்க டொலருக்கு நிகரான ரஷ்ய நாணய பெறுமதி வீழ்ச்சியடைந்த நிலையில், ரஷ்ய மத்திய வங்கி பிரதான வட்டி வீதத்தை 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

13) உக்ரைன் தலைநகர் கியவில் இருந்து பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேற முடியும் என்று ரஷ்ய படையினர் அறிவித்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு கீழுள்ள தொட்டு எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

Reported by
Editorial Reporter